1 |
Vaigaraivanam
வைகறை வானம் |
ஆன்மிக நிகழ்ச்சி: மதம்சாராத ஆன்மீகக் கருத்துகளும், மானுட ஒழுக்கத்தின் அடிப்படையிலான ஆன்மீக கீதங்களும் இந்திகழ்ச்சியில் ஒலிபரப்பப்படுகின்றன.
|
|
|
2 |
Munnilai Thahavalhal
முன்னிலைத் தகவல்கள் |
உலகம் நாகரீகத்தின் பாதையில் மின்னல்வேகத்தில் பயணித்து கண்ணுக்கெட்டா இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், அடிப்படை விழிப்புணர்வைக் கூடப் பெறாத மக்கள் சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயன்படும் உலகின் நிகழ்வுகள் தகவல்களாகத் தரப்படுகின்றன.
|
|
|
3 |
Thannambikkai Neram
தன்னம்பிக்கை நேரம் |
இந்த அரைமணி நேரம் மட்டுமல்ல... கேட்போரின் வாழ்க்கைக்கே வழித்துணையாய் வரும் நிகழ்ச்சி இது. இற்றுப்போன இதயங்களிலும் புதிய குருதியாய்ப் பாய்ந்து செயல்திறன் கொள்ளச் செய்யும் நேரம் தன்னம்பிக்கை நேரம். தன்னம்பிக்கையை வளர்க்கும் கருத்துகள் இசையோடு ஒலிபரப்பாகின்றன. |
|
|
4 |
Porulathara Ulaha Thahavalhal
பொருளாதார உலக தகவல்கள்
|
வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து பால்மனம் கொண்டுவாழும் பாமரமக்களுக்கு, பொருளாதாரத்தை மனிதனும், மனிதனைப் பொருளாதாரமும் மாறிமாறித்துரத்தும் போக்கினை புள்ளி விவரங்களோடு உணர்த்தும் நிகழ்ச்சி. பங்குச்சந்தை நிலவரங்கள், அரசுகளின் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள், நிறுவனங்களின் வணிகப்போக்கு பற்றிய விவரங்கள் இதன் வாயிலாக விவரிக்கப்படுகின்றன. |
|
|
5 |
Sirappu Paarvai instead of Ini Oru Vidhi Cheivom
சிறப்புப் பார்வை |
சமுதாயத்தை பாதிக்கும் கல்வி, கலை, பண்பாடுகள், மக்கள் எதிர்நோக்கியிருக்கும் வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்த தெளிவான அலசலே சிறப்புப் பார்வை. பிரிவினை வாதங்களைத் தவிர்த்து இணைந்துசெயல்பட மக்களை அறிவுறுத்தும் கருத்துக் கோவைகள் சிறப்புப் பார்வையில் இடம் பெறுகின்றன. |
|
|
6 |
Urimai Ulaga Thahavalhal
உரிமை உலக தகவல்கள் |
குழந்தைகளுக்கான உரிமைகள், பெண்களுக்கான உரிமைகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான உரிமைகள், மானுட உரிமைகள் குறித்த தகவல்கள் இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. 'உன்னையே நீ அறிவாய்' -என்பார் தத்துவமேதை சாக்ரடீஸ். ஒவ்வொருவருக்கான உரிமைகள் குறித்து உலகநிகழ்வுகளுடன் எடுத்துரைத்து ஒவ்வொரு மனிதரும் தனக்கான உரிமைகளை அறியச் செய்யும் நிகழ்ச்சி |
|
|
7 |
Ulaha Naduhalil Thamilarhal
உலக நாடுகளில் தமிழர்கள் |
உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் இன்ப துன்பங்கள் குறித்த தகவல்கள். குடிபெயர் தொழிலாளர்கள் உரிமைகள், அயல்நாடுகளில் இந்தியத் தூதரகங்களின் செயல்பாடுகள், தமிழர்களை, இந்தியர்களைப் பணிக்கமர்த்தியுள்ள பிறநாடுகளின் கொள்கைகள் குறித்த தகவல்கள் புலம்பெயர்ந்தோரின் இலக்கியம் இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. |
|
|
8 |
Digital Thamilaham
டிஜிட்டல் தமிழகம் |
புதிதாக அறிமுகமாகும் மின்கருவிகள், மின்னணுக் கருவிகள், ஊர்திகள், நுகர்பொருட்கள் பற்றிய தகவல்கள், அக்கருவிகளின் செயல்பாடுகள் இடம்பெறும் நிகழ்ச்சி |
|
|
9 |
Munnilai Thahavalhal
முன்னிலை தகவல்கள்
|
உலகம் நாகரீகத்தின் பாதையில் மின்னல்வேகத்தில் பயணித்து கண்ணுக்கெட்டா இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், அடிப்படை விழிப்புணர்வைக் கூடப் பெறாத மக்கள் சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயன்படும் உலகின் நிகழ்வுகள் தகவல்களாகத் தரப்படுகின்றன. |
|
|
10 |
Maruthuva Ulagam
மருத்துவ உலகம் |
சித்த, ஆயுர்வேத இயற்கை மருத்துவம் சார்ந்த சிறுசிறு மருத்துவக் குறிப்புகள் இடம்பெறும் நிகழ்ச்சி; மருத்துவ காப்பீடு, ஏழை நடுத்தர மக்களுக்கான சிகிச்சை முறைகள் - நோய் தடுப்பு வாழ்க்கை முறை |
|
|
11 |
Nool Arimugam
நூல் அறிமுகம் |
மனிதர்களை நல்வழிப்படுத்தும், அவர்களின் வாழ்வினை, சிந்தனைகளை உயர்த்தும் சிறந்த நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள், பதிப்பகம் குறித்த அறிமுகம் - நூல் அறிமுகம் |
|
|
12 |
Chaathanaiyalar Neram
சாதனையாளர் நேரம் |
சாதனையாளர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகளை அறியும் சிலம் புதிய சாதனையாளர்களாக மாறும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது வெற்றி கண்டவர்கள் கடந்துவந்த தடம் பற்றிய பயன்மிகு நிகழ்ச்சி. |
|
|
13 |
Munnilai Thahavalhal
முன்னிலை தகவல்கள் |
உலகம் நாகரீகத்தின் பாதையில் மின்னல்வேகத்தில் பயணித்து கண்ணுக்கெட்டா இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், அடிப்படை விழிப்புணர்வைக் கூடப் பெறாத மக்கள் சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயன்படும் உலகின் நிகழ்வுகள் தகவல்களாகத் தரப்படுகின்றன. |
|
|
14 |
Sutru Suzhal Ulaga Thahavalhal
சுற்றுச்சூழல் உலக தகவல்கள் |
சுற்றுச்சூழல் மாசுகள், பல்லுயிர்ப் பெருக்கம், உலகம்வெப்பமாதல், அழிந்துவரும் காடுகள், உயிரினங்கள், சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மனிதர்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் குறித்த தகவல்களைத் தரும் நிகழ்ச்சி. |
|
|
15 |
Nagai Chuvai
நகைச்சுவை |
சிந்தனையைத் தூண்டும் நேயர்களின் நகைச்சுவைக் குறுந்தகவல்கள் இந்நிகழ்ச்சியால் ஒலிபரப்பாகின்றன. |
|
|
16 |
Munnilai Thahavalhal
முன்னிலை தகவல்கள் |
உலகம் நாகரீகத்தின் பாதையில் மின்னல்வேகத்தில் பயணித்து கண்ணுக்கெட்டா இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், அடிப்படை விழிப்புணர்வைக் கூடப் பெறாத மக்கள் சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயன்படும் உலகின் நிகழ்வுகள் தகவல்களாகத் தரப்படுகின்றன. |
|
|